60வது பிறந்த நாள்.. உடன் நடித்த நடிகரை அமெரிக்கா சென்று பார்த்த மீனா-குஷ்பு..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

தன்னுடன் நடித்த நடிகரின் 60வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அமெரிக்க சென்ற குஷ்பூ மற்றும் மீனாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபல ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன், இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ள நிலையில் அவரது 60வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்ற குஷ்பூ மற்றும் மீனா இருவரும் நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தன்னுடன் நடித்த இருவரையும் நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்த நெப்போலியன் இருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து 60வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இருவருடன் இணைந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் நெப்போலியன் மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் இணைந்து ’எட்டுப்பட்டி ராசா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ’எஜமான்’ திரைப்படத்தில் நெப்போலியன் மற்றும் மீனா இருவரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.