உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கைகளின் மூலம் தமிழக முதல்வருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் 100% இருக்கை அனுமதிக்கு ஒரு சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்றாகும். ஒரு சினிமாக்காரி ஆக நான் சிந்திக்கவில்லை. நாம் தற்போது ’கொரோனா வைரஸ்’ என்றும் ’சீனா வைரஸ்’ என்றும் அழைக்கின்றோம். 100 சதவீத இருக்கைகள் அனுமதியால் ’சினிமா வைரஸ்’ என்ற கெட்ட பெயரை நாம் எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வரையும் ஹீரோக்கள் மற்றும் திரையுலகிலகினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஒட்டுமொத்தமாக லாக்டவுன் ஆவதற்கு பதிலாக தற்போது ஏற்பட்டு வரும் சிறிய இழப்பு மேல்தான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று கவலைப்பட்டால் தயவுசெய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது தான். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு அழைத்து கட்டாயப்படுத்தவில்லை. உங்களை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
100% இருக்கைகள் அனுமதி அளித்துள்ளது குறித்து கஸ்தூரி மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் மாறுபட்ட கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The risk is just too too much. As a cinemakaari, I dread to think...we call the Coronavirus 'Chinavirus'. Can we risk the name 'cinemavirus'? I beg our CM , heroes and exhibitors to rethink this most dangerous decision. Revenue loss is a lesser evil than total lockdown again.
— Kasturi Shankar (@KasthuriShankar) January 4, 2021
Those who have different opinions on 100% capacity functioning of cinema theaters, only one message for you. Pls don't go if you are worried. Your fear is understandable and nobody forces you to come. Take care. ??????
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 4, 2021