என் மாமியாரின் கனவு நனவானது: பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பிரபல நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் பிரபல நடிகையின் மாமியார் அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு எனது மாமியாரின் கனவு நினைவானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் குஷ்பு என்பதும் தற்போது அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் அவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்பட ஒரு சில பிரபலங்கள் சந்தித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் குஷ்பு தனது மாமியாருடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி சொல்ல எவ்வளவு வார்த்தைகள் இருந்தாலும் போதாது. 92 வயதில் மோடியை பின்பற்றுபவர் மற்றும் ரசிகராக இருக்கும் எனது மாமியார் ஸ்ரீமதி தெய்வானை சிதம்பரம் பிள்ளைக்கு இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மோடி அவர்களை ஒரு முறையாவது சந்திப்பது அவரது கனவாக இருந்ததால், இந்த சந்திப்பு அவருக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது.
உலகில் மிகவும் பிரபலமான, அனைவராலும் விரும்பப்படும், போற்றப்படும் தலைவரான நமது பிரதமர், மிகவும் அரவணைப்புடனும் மரியாதையுடன் எனது மாமியாரை வரவேற்றார். அன்பும் பாசமும் நிரம்பிய அவரது வார்த்தைகள் ஒரு மகன் தன் தாயிடம் பேசுவது போல இருந்தது. மோடி அவர்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவராலும் போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை, மேலும் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.
உங்களுடன் சில நிமிடங்கள் இருந்தது என்றென்றும் போற்றப்படும். என் மாமியாரின் கண்களில் ஒரு குழந்தை போன்ற மகிழ்ச்சியை நான் பார்த்தேன். இந்த வயதில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. பிரதமர் அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் பதிவு செய்த புகைப்படத்தில் பிரதமர் மோடிக்கு குஷ்புவின் மாமியார் பொட்டு வைப்பது போல் இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
No amount of words would suffice to thank our H'ble PM Shri @narendramodi ji for giving so much happiness and joy to my ma-in-law, Smt #DeivanaiChidambaramPillai , who at 92 is a huge Modi follower and a fan.
— KhushbuSundar (@khushsundar) January 20, 2024
It was a moment of super excitement for her as it was her dream to… pic.twitter.com/5OM4E1Uaad
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com