நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் குஷ்புவின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கூகுள் டூடுல் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கூகுள் முதல் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அடையார் மணி மண்டபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் என்பதும், இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர் திலகம் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்கிறேன். அவரைப் போன்றவர்கள் ஒருபோதும் மறைய மாட்டார்கள். அவர்கள் என்றென்றும் நம் இதயத்தில் வாழ்கிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Remembering the greatest of all, the Legendary icon, #NadigarThilagam on his birthday today. People like him never fade away. They live in our hearts forever. #HappyBirthdaySivajiGanesan Avl. ???????? pic.twitter.com/q8BzCelYxn
— KhushbuSundar (@khushsundar) October 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com