எப்படி ஆரிக்கு மட்டும் முதல்ல இது நடக்குது? ஹவுஸ்மேட்ஸ் விவாதம் குறித்து நெட்டிசனின் குறும்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆரி மிகவும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேச்சுத்திறமையுடனும் விளையாடி வருவதால் அவரை வெளியேற்ற ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து நாமினேட் செய்து வருகின்றனர்
முதல் வாரம் நாமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் மட்டுமே ஆரி நாமினேஷன் பட்டியலில் இல்லை. அதன் பின்னரும் அதன் பின்னர் ஆறாவது வாரத்தில் அவர் கேப்டனாக இருந்ததால் அந்த வாரமும் அவர் நாமினேஷனில் இல்லை. இந்த இரண்டு வாரங்கள் தவிர மற்ற அனைத்து வாரங்களிலும் நாமினேஷன் பட்டியலில் ஆரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரண்டு நபர்கள் காப்பாற்றபடுவதாக கமல்ஹாசன் அறிவிக்கும்போது ஆரியின் பெயர்தான் முதலில் இருந்தது என்பதும், கடந்த வாரம் கூட ஆரிதான் முதலில் காப்பாற்றப்பட்டார் என்று கமலஹாசன் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து பாலாஜி, ஆஜித், ஷிவானி, ரியோ ஆகியோர் விவாதம் செய்யும் குறும்படம் ஒன்றை நெட்டிசன் பதிவு செய்துள்ளார். இதில் ஆரி எப்படி முதலில் காப்பாற்றப்படுகிறார் என்றே புரியல்லை என்றும், ஒருவேளை நம்மை எல்லாம் மக்கள் கலாய்க்கின்றார்களா? என்று எனக்கு புரியவில்லை என்றும் கூறினார்
அப்போது ஆஜித், ‘அவர் அவர் விளையாடுவது மட்டும் வெளியே நிறைய தெரிந்திருக்கும் என்று கூற, அதற்கு ஷிவானி, சனம் விளையாடுவது கூட நிறைய தெரிந்திருக்கும் பிறகு அவர் எப்படி வெளியேறினார்? என்ற கேள்வி கேட்கிறார்
அதன் பின்னர் ’ஆரி என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு அதை அவரது பேச்சால் தனது தவறை சரி செய்துவிடுகிறார் என்றும், அதனால் அவர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி விடுகிறார் என்று கூற அதனை ரியோ உள்பட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். நானும் இதை பலமுறை யோசித்தேன் என்று ரியோ கூறினார். இதேபோல் பிக்பாஸ் முதல் சீசனில் ஒவியா ஒவ்வொரு முறை நாமினேஷன் செய்யப்பட்டும் முதல் நபராக காப்பாற்றப்பட்டது குறித்து சக்தி உள்ளிட்டோர் விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் ஆரி எப்படி முதலில் சேவ் செய்யப்படுகிறார் என்று தெரியாமல் நான்கு பேரும் குழப்பத்தில் தான் உள்ளனர் என்பது இந்த குறும்படம் மூலம் தெரிய வந்துள்ளது
These HMs can't even digest #Aari getting saved first, no idea what they will do if #AariArjunan wins this competition ?? #BiggBossTamil4 pic.twitter.com/jGyoyuPQ4A
— Aari Army (@AariArjunanArmy) December 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments