குரங்கணி தீவிபத்து: இன்று ஒரே நாளில் இருவர் பலி

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த சிலர் ஒவ்வொருவராக கடந்த சில நாட்களாக பலியாகி வந்ததால் பலி எண்ணிக்கை நேற்று வரை 18ஆக இருந்தது

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இன்று மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த சாய்வசுமதி என்பவரும் சென்னையை சேர்ந்த நிவ்யா பிரக்ருதி  என்பவரும் பலியாகினர். இன்று ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் மேலும் சிகிச்சை பெற்று வரும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தாவின் அடுத்த படத்தில் மிஷ்கின் பட நாயகன்

சமந்தா நடிக்கவுள்ள அடுத்த படமான 'யூடர்ன்' தமிழ் ரீமேக் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு குறித்த ஆலோசனையில் இயக்குனர் பவன்குமார் உள்ளார்.

500 நாளில் ஒருநாள் கூட விஜய் தவறியதில்லை: இயக்குனர் பரதன்

பரதன் இயக்கத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் பைரவா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதுபோல் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் 'மதுர' ஆகிய படங்களுக்கு பரதன் வசனம் எழுதியுள்ளார்

போயஸ் கார்டனில் தினேஷ் கார்த்திக்-தீபிகாவின் கனவு இல்லம்

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார்.

பெண் வேட புகைப்படம் குறித்து அனிருத் தரப்பின் விளக்கம்

இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில்தான் அனிருத் பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை.