குரங்கணி காட்டுத்தீ: 14ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

  • IndiaGlitz, [Thursday,March 15 2018]

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் ஏற்கனவே 11 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இரண்டு பேர் இன்று மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் ஒருசிலர் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கண்ணன் என்பவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சென்னையை சேர்ந்த அனுவித்யா என்பவரும் இன்று மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.