சிவகார்த்திகேயனை சந்தித்த புதுமாப்பிள்ளை குறளரசன்!

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசன் திருமணம் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள, குறளரசனின் சகோதரரும் நடிகருமான சிம்பு லண்டனில் இருந்து திரும்பி வந்தார்.

இந்த நிலையில் குறளரசன் - நபீலா அஹ்மத் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து குறளரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து குறளரசன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.