close
Choose your channels

ஜிவி பிரகாஷ் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார்

Tuesday, June 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று சென்னை கடற்கரையை சுத்தம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

'குப்பத்து ராஜா' படக்குழுவினர்களின் இந்த கடற்கரை சுத்தம் செய்தல் பணி குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'கடற்கரையை சுத்தம் செய்யும் சமூகப்பணி வேற லெவல் பணி என்றும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் 'குப்பத்து ராஜா' இயக்குனர் சரவணன், நடிகர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜிவி பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி, பூஜம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'எங்க ஏரியா எங்களோடது' என்ற சிங்கிள் பாடல் கடந்த 13ஆம் தேதி ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் அன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment