நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் கும்கி நடிகர்: திரையுலகினர் வாழ்த்து 

  • IndiaGlitz, [Wednesday,June 24 2020]

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கிய ’பாஸ் என்ற பாஸ்கரன்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ’வந்தான் வென்றான்’ ’தில்லு முல்லு’ ஆகிய படங்களில் நடித்தாலும் அஸ்வினுக்கு பேரும் புகழும் பெற்று தந்த திரைப்படம் பிரபு சாலமன் இயக்கிய ’கும்கி’ திரைப்படம் தான். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் வெகுவாக புகழப்பட்டது என்பதும், இதனை அடுத்து அவருக்கு ’கும்கி அஸ்வின்’ என்ற பெயர் கோலிவுட்டில் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கும்கி அஸ்வின், வித்யாஸ்ரீ என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்எஸ் படித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது என்ற செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் இருவீட்டார் முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இரு வீட்டாரின் தரப்பில் 20 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் ஏராளமான திரையுலக நண்பர்கள் போன் மூலம் அஸ்வினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் முடிந்தவுடன் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

வாயில் ஊறும் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! புது முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள்!!!

கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் பணி இதுவரை கடினமாகவே இருந்து வருகிறது.

ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு ஆடையின்றி சென்ற ஆபாச நடிகர், நடிகை: அதிர்ச்சி வீடியோ

நியூசிலாந்து நாட்டில் ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு அவர் பார்த்த ஆபாச படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகை ஆடையின்றி நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா!!! சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் அதிர்ச்சி!!!

மெக்சிகோவில் ஒரே பிரவசத்தில் ஒரு பெண்ணிற்கு 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை பிறந்தது

கல்வான் தாக்குதலில் 40 சீன இராணுவ வீரர்கள் உயிரிழப்பா??? சீனா என்ன சொல்கிறது???

கடந்த ஜுன் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் மலை பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற கைக்கலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

பாலிவுட்டில் ஆக்சன் நாயகி ஆகும் 'மாஸ்டர்' நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், அதன் பின்னர் ஜாக்பாட் அடித்தது போல் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நாயகி ஆனார்.