close
Choose your channels

'கும்கி' காமெடி நடிகர் அஸ்வின் ராஜா மனைவி ஒரு டாக்டரா? வைரலாகும் திருமண புகைப்படங்கள்..

Saturday, April 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ’கும்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமான நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவரது மனைவி அமெரிக்காவில் படித்த டாக்டர் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அஸ்வின் ராஜா, பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் என்பவரின் மகன் என்பதும் இவர் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’பாஸ் என்ற பாஸ்கரன்’ என்ற திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகன் பால்பாண்டி என்ற கேரக்டரில் சாப்பாட்டு ராமன் அறிமுகமான அஸ்வின் ராஜா, இதையடுத்து அவர் ’எத்தன்’ ‘வந்தேன் வென்றேன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். இருப்பினும் ’கும்கி’ படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. அதன் பிறகு ’தில்லு முள்ளு’, ‘நையாண்டி’ ’நெடுஞ்சாலை’ ’காவல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலினின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் கூட மெக்கானிக் சுரேஷ் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஸ்வின் ராஜா தான் நீண்ட நாள் காதலித்த வித்யாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். வித்யாஸ்ரீ என்பவர் அமெரிக்காவில் டாக்டர் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment