கறிவிருந்து வைத்து கொரோனா திருவிழாவை கொண்டாடிய இளைஞர்: அள்ளிச்சென்ற போலீஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கொரோனாவை திருவிழாவாக கொண்டாடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள தியாகசமுத்திரம் என்ற பகுதியை சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து வயல்வெளி ஒன்றில் நீண்ட இலைகளை போட்டு அதில் சிக்கன் குழம்பு உடன் கூடிய சாப்பாட்டை விருந்து வைத்து அசத்தி உள்ளார்.

கொரோனா விருந்து என்ற பெயரில் இவர் வைத்த இந்த விருந்து நிகழ்ச்சியை அவர் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்துள்ளார். சமூக விலகலை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இவர் இந்த விருந்து வைத்தது குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சிவகுருவையும் அந்த விருந்தில் கலந்து கொண்ட சிலரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

உலகமே கொரோனாவை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இளைஞர் மட்டும் கொரோனாவை திருவிழா போல் கொண்டாடி உள்ளது அவர்களது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

More News

வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடும் வரலட்சுமி: நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு திண்டாடி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்திருக்காங்க: ரேணிகுண்டா நடிகரின் வீடியோ

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்களாகத் தான் இருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தின் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில  நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே