காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது: முதல்வர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடகா மாநிலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய கர்நாடக ஐகோர்ட், இருப்பினும் 'காலா' படத்தை திரையிட விரும்பும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கர்நாடக முதவர் குமாரசாமி அவர்கள் கூறியபோது, 'காலா படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு"உள்ளது. எனவே * மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது' என்று கூறியுள்ளார்.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைப்பதாக கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தடைகளை தாண்டி கர்நாடகாவில் 'காலா' வெளியாகுமா? என்பதை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments