என் படத்தை பீரிசரில் வைத்து உயிரோடு அஞ்சலி செய்துவிட்டார்கள்: அறிமுக இயக்குனர் ஆதங்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

நான் இயக்கிய திரைப்படத்தை பிரீசரில் வைத்து உயிரோடு ஆணி அடித்து அஞ்சலி செய்து விட்டார்கள் என அறிமுக இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ’குய்கோ’. யோகி பாபு மற்றும் விதார்த் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் பத்திரிகையாளரின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்தியை சரியாக விளம்பரம் செய்யவில்லை என்றும் 24 ஆம் தேதி ரிலீசான இந்த படத்தின் விளம்பரங்கள் 21ஆம் தேதி தான் வந்தது என்றும் இந்த படம் வெளியானது பலருக்கு தெரியவில்லை என்றும் இயக்குனர் அருள்செல்வன் கூறியுள்ளார். மேலும் பல முக்கிய நகரங்களில் இந்த படம் வெளியாகவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அருள் செல்வம் தனது சமூக வலைத்தளத்தில் ’குய்கோ’ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. ரசிகர்களின் ஆதரவு இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தும் ’குய்கோ’ படத்தை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக ப்ரீசர் பாக்ஸில் வைத்து ஆணி அடித்து உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள். ’குய்கோ’வுக்கு எனது வீர வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பின்குறிப்பாக ’துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும்’ என்றும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.