கழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது கழுத்தில் கரன்ஸி மாலையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
நடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பீட்டர் பீட்டர் பால் மற்றும் தனது இரண்டு மகள்களுடன் தானும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள வனிதா மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரின் கழுத்தில் கரன்ஸி மாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பீட்டர் பால் மற்றும் வனிதா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலம் தேறி வந்ததையடுத்து இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் வனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்
Lakshmi kuberan pooja at home...Hospital to back home in 2020 is a miracle by itself..only god can do it..he has a plan and I am going with it blindly ...my faith and goodness will take care of me and my family...a year never to forgotten..teaching us life and the power of god pic.twitter.com/dF8KUKri9v
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments