ரஜினியின் 'கூலி' படத்தில் இணைகிறாரா 'குபேரா' நடிகர்? லோகேஷ் கனகராஜ் சம்பவம்..!

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் அதுமட்டுமின்றி படக்குழுவினர் வெளியிட்ட முன்னோட்ட வீடியோ அட்டகாசமாக இருந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் 'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

‘கூலி’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்தும் பணியில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ‘கூலி’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் நாகார்ஜுனா, தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் ‘கூலி’ திரைப்படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் ஒரு பான் இந்திய படமாக உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்திலும் லோகேஷ் தரமான சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

More News

அன்னையர் தினத்தில் நதியாவின் பதிவு.. அருகில் இருப்பது அவரது சகோதரியா?

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அரசியல் தலைவர்களும்

பா. ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்தது: பிரவீன் காந்தி

நடிகர் ரஞ்சித் நடித்த 'கவுண்டம்பாளையம்' என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி, 'பா ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்தது

சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' ஒளிபரப்பாகும் தேதி.. 'குக் வித் கோமாளி'யை மிஞ்சுமா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நடந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும், இந்த சீசனில் வெங்கடேஷ் பட்

இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்: தவெக தலைவர் விஜய்யின் பதிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அன்னையர் தின வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் வீட்டில் இன்னொரு மணமகள் ரெடி.. வைரலாகும் அதிதி ஷங்கர் போட்டோஷூட்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும்,