கே.டி.குஞ்சுமோனின் 'ஜெண்டில்மேன் 2' இசையமைப்பாளர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் ’ஜென்டில்மேன் 2’ என்ற படத்தை நீண்ட இடைவெளிக்கு பின்னர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என யூகித்து சொல்பவர்களுக்கு தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் ’ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பாகுபலி’ உள்பட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி தான் ’ஜென்டில்மேன் 2’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகைப்படத்தையும் கேடி குஞ்சுமோன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1993ஆம் ஆண்டு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், அர்ஜுன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 19 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Here mega producer @KT_Kunjumon proudly announce,The iconic legend of Indian Cinema @mmkeeravani garu will be the music director of #GentlemanFilmInternational's#Gentleman2
— Johnson PRO (@johnsoncinepro) January 23, 2022
??Gold coin Winners will be announced ??#ஜென்டில்மேன்2 pic.twitter.com/rOcLOrdu9S
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments