'ஜெண்டில்மேன் 2' இயக்குனர் இவரா? கே.டி.குஞ்சுமோன் அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகமான திரைப்படம் ’ஜென்டில்மேன்’ என்பதும் இந்த படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் 19 ஆண்டுகள் கழித்து ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் குஞ்சுமோன் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க இருப்பதாகவும் கேடி குஞ்சுமோன் அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா என கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார், இவர் ஏற்கனவே நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
#GentlemanFilmInternational
— K.T.Kunjumon (@KT_Kunjumon) June 6, 2022
Proud to announce A.Gokul Krishna @agoks as the director of our mega blockbuster project #Gentlemen2 @mmkeeravani @NayantharaaC @PriyaaLal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar @PRO_SVenkatesh pic.twitter.com/M8YXR2ovIh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments