'2.0' திரைப்படம் 2.ஓஹோ என ஓடவேண்டும்: பிரபல இயக்குனர் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் குழுவினர்களின் நான்கு வருட உழைப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'முத்து', 'படையப்பா' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், '2.0' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'2.0' திரைப்படம் எந்த வருடம் வந்தாலும் அதன் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையாது. ரஜினியை ஆக்சன் ஹீரோவாக பார்க்கவும், இளமையாக பார்க்கவும், புது ஸ்டைலில் பார்க்கவும்தான் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். நானும் அவருடைய ரசிகர்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பிரமாண்டம் குறித்து சொல்லவே வேண்டாம், ஷங்கர் பின்னியிருப்பாரு. எனவே ரஜினிகாந்த், ஷங்கர், அக்சயகுமார், சுபாஷ் , ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மொத்தத்தில் 2.0 திரைப்படம் 2.ஓஹோ என வெற்றி பெற வேண்டும்' என்று இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்,.

 

More News

கஜா புயல் பாதித்த களத்தில் கமல்ஹாசன்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்பை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து நிவாரண பணிகளை வழங்கி வரும் நிலையில்

அமலாபால் நடிக்கும் 'ஆடை' படக்குழுவின் வித்தியாசமான முயற்சி

அமலாபால் நடித்து வரும் 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் மேனனின் 'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சென்னை வருகையின் நோக்கம் என்ன? பவன்கல்யாண் விளக்கம்

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் இன்று சென்னை வந்துள்ளார்

செல்போன் நெட்வொர்க் மூலம் கஜா நிவாரண நிதி: சிம்புவின் புதிய ஐடியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு அரசியல் கட்சிகள், திரையுலகினர் உள்பட பலர் லட்சங்களிலும் கோடிகளிலும் உதவி செய்து வருகின்றனர்.