'மிக்சர்' சாப்பிட்ட அந்த நடிகர் யார்? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை, அவர் மிக்சர் சாப்பிடுவதை போல மீம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த மிக்சர் சாப்பிடும் மீம்கள் எப்படி தோன்றியது தெரியுமா?
பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'நாட்டாமை' படத்தில் இடம்பெற்ற மிக்சர் சாப்பிடும் காட்சி அனைவரையும் கவர்ந்த காட்சி. சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பயன்படுத்தப்படும் இந்த மிக்சர் காட்சி குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தற்போது என்ன கூறினார் என்பதை பார்ப்போம்
அந்த காமெடி காட்சியின்படி மிக்சர் சாப்பிடும் ஐடியா சூட்டிங் ஸ்பாட்டில்தான் தோன்றியது. அந்த கேரக்டரில் நடித்தவர் ஒரு லைட்மேன். அந்த கேரக்டரை போலவேதான் அந்த லைட்மேன் வேலையையும் பார்த்து கொண்டிருந்தார். லைட்டை 'ஆஃப்னா ஆஃப் பண்ணுவாரு', அங்கேயும் சும்மாதான் உட்கார்ந்துட்டு இருந்தாரு. என்னோட அசிஸ்டண்ட்ஸ் எல்லோரும் இவர நடிக்க வைக்கலாம்னு சொன்னாங்க. நானும் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை நடிக்க கூப்பிட்டேன். அவர் முதலில் நடிக்க தயங்கினார். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். ஸ்டார்ட் கேமிரா சொன்னதும் மிக்சரை எடுத்து சாப்பிட்டா போதும், மிச்சத்தை நாங்க பாத்துக்குரோம்ன்னு சொன்னேன். ஆனால் அந்த டேக் முடிவதற்குள் ஒன்றரை கிலோ மிக்சரை சாப்பிட்டுட்டார்' என்று நகைச்சுவையுடன் கே.எஸ்.ரவிகுமார் கூறினார்.