அஜித்தின் தயக்கத்தை நீக்கிய கே.எஸ்.ரவிகுமார்: ஒரு மலரும் நினைவு!

’வரலாறு’ திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த தயக்கத்தை சிவசங்கர் மாஸ்டர் அவர்களை உதாரணமாக காட்டி தீர்த்து வைத்ததாகவும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தனது மலரும் நினைவுகளாக தெரிவித்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி காலமானார் என்பது தெரிந்ததே. அவருடன் ’வரலாறு’ திரைப்படத்தில் பணிபுரிந்த போது ஏற்பட்ட மலரும் நினைவுகளை கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

சிவசங்கர் மாஸ்டர் அவர்களை எனக்கு நீண்ட காலமாக தெரியும் என்றும், அஜித் நடித்த ’வரலாறு’ திரைப்படத்தில் அவர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய போது அஜித்துக்கு தனது கேரக்டர் குறித்து சின்ன தயக்கம் இருந்தது என்றும், தனது கேரக்டர் பெண் தன்மையுடன் இருப்பதால் தனது கேரக்டர் தவறாக புரிந்து கொள்ளப்படுமா என்ற தயக்கம் அஜித்துக்கு இருந்தது என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து சிவசங்கர் மாஸ்டர் அவர்களும் பெண் தன்மையுடன் இருப்பார் என்றும் ஆனால் அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு என்றும் அவர் தன்னுடைய நடனக் கலையை உடலில் ஏற்றுக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் பெண்தன்மை இருந்தாலும் அவரை தவறான கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை என்றும் அஜித்திடம் தான் கூறியதாகவும் அதனை அடுத்து அஜித் தயக்கத்தை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் கேரக்டருக்கு சிவசங்கர் என்ற பெயர் வைக்கவும் அவர் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

இல்லாத விஷயத்தை இருப்பதாக காட்டுவதுதான் பிரேக்கிங் செய்தியா? இமான் கண்டனம்!

இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என இமான் அண்ணாச்சி பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் புதிய புயல்… சென்னை வானிலை தகவல்!

தெற்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

7 ஆவது முறையாக விருது… அசத்தும் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது.

கமல்ஹாசன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.