இதுவரை நடித்திராத மாஸ் ரோலில் ராகவா லாரன்ஸ்: இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய சகோதர் எல்வின் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
காமெடி மற்றும் எமோஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முதல்முறையாக இதற்குமுன் நடித்திராத மாஸ் ரோலில் நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
On Raghava Lawrence's b'day @tridentartsoffl & @AREntertainoffl announces that @ksravikumardir @offl_Lawrence @elviinvinu_off are coming together for an Action, Comedy & Emotion based film.#Lawrence will play a never before Mass Role in special appearance, #Elvin plays the lead pic.twitter.com/fM1azpDp4r
— Trident Arts (@tridentartsoffl) October 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments