close
Choose your channels

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் திடீர் சந்திப்பு! அடுத்த பட திட்டமா?

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? வருடத்திற்கு இரண்டு படங்கள் தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டார் போல் தெரிகிறது. 2018ல் 'காலா' மற்றும் '2.0', 2019ல் 'பேட்ட', 2020ல் 'தர்பார்' என ரஜினியின் திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று 'தர்பார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளிவந்துள்ள நிலையில் ரஜினியின் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி வெளிவந்தது. அந்த படம் குறித்து இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து இருவரில் ஒருவர் விளக்கமளித்தால் மட்டுமே ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment