பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார் இணைந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்: பிரபல நடிகை அறிவிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 

பொங்கல் ரிலீஸ் போட்டியில் இணைந்த மேலும் ஒரு படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்', சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய மூன்று திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள

இன்றே ஒருவர் வெளியேறுகிறாரா? கமல் வைத்த டுவிஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்கள் முடிந்து இன்று 97வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் கமலஹாசன் பேசும் காட்சிகள் உள்ளது.

மீண்டும் ஒருமுறை பவரை நிரூபித்த ஆரி ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் முடிந்த 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் சோம் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது 

கயிறு டாஸ்க்கில் வெற்றி பெற்றது இவர் தான்: எத்ததனை மணி நேரம் தாக்குப்பிடித்தார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கயிறு டாஸ்க் நடந்தது என்பதும் இதில் கடைசி நேரத்தில் ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்கு பிடித்தனர் என்பதும் இவர்களில் யார் வெற்றி பெற்றார்கள்