அஜித், விஜய் பட இயக்குனரின் மகனை ஹீரோவாக்கும் கே.எஸ்.ரவிகுமார்!

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கிய பல திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தான் தயாரிக்க இருக்கும் ’கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தில் பிக்பாஸ் தர்ஷனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்

இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்யா நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’, ‘புரியாத புதிர்’ போன்ற படங்களில் கேஎஸ் ரவிக்குமார் உதவி இயக்குநராக பணி புரிந்தார் என்ற நிலையில் தற்போது அவரது மகனை தனது படத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஹீரோவாக அறிமுகம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

அதிமுக தொண்டர்களைப் திடீரென பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து: ஏன் தெரியுமா?

முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் பல ஆண்டுகளாக திமுகவின் ஆதரவாளராக இருந்து வருபவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திடீரென

தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

தமிழக அரசையும் தமிழக காவல்துறையும் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்

முன்னணி நடிகைக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் சம்மன் மனு அனுப்பி இருக்கிறது.

நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு: என்ன காரணம்?

பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு