குட்டப்பன் ஆம்பிளையா? பொம்பளையா? 'கூகுள் குட்டப்பா' டீசர்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அவரே ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர் என்பதும், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் குட்டப்பாவாக வரும் ரோபோ செய்யும் சேட்டைகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.

குட்டப்பா ரோபோ சமையல் செய்வது, காபி பரிமாறுவது, அம்மியில் மிளகாய் அரைப்பது உள்பட பல வேலைகளை செய்கிறது. அது மட்டுமின்றி வயலில் நாத்து நடுவது உள்பட விவசாய வேலைகளையும் செய்கிறது. இந்த ரோபோவை பார்த்து அது ஆம்பிளையா? பொம்பளையா? என அப்பாவியாக ஒரு பெண் கேள்வி கேட்கும் காட்சியும் டீசரில் உள்ளது.

முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் மலையாளத்தை போலவே தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி!

நியூசிலாந்து அணியில் விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டதாக அவரது வழக்கறிஞர்

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் இவர் முதல் சில வாரங்கள் மிக அருமையாக விளையாடினார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு பார்டிகார்டாக இருந்த போலீஸ்… 1.5கோடி சம்பளமா?

பாலிவுட்டில் பிக். பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரபலங்களுக்கு வழங்கப்படும் எக்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் செல்பி புகைப்படம்: இணையத்தில் வைரல்

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜெயம் ரவி தன்னுடைய

துருவ்-மாரிசெல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷ் நடித்த 'கர்ணன்' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும்