'கபாலி' ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை. சொல்வது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கிய ராசியான இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினியின் படங்களை இயக்கியது மட்டுமின்றி ரஜினியின் குட்புக்கிலும் இடம்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் 'கபாலி' படத்தை பார்த்துவிட்டு இந்த படம் குறித்து அவர் ரஜினியை நேரில் சந்தித்து பேசியபோது, 'கபாலி ரஜினி படமும் இல்லை ரஞ்சித் படமும் இல்லை. இது ஒரு பக்காவான டான் கதை. இந்த படத்தில் நீங்கள் நன்றாக ஃபெர்பாம் செய்துள்ளீர்கள்' என்று கூறினாராம். அதற்கு ரஜினியிடம் இருந்து அவருடைய வழக்கமான டிரேட்மார்க் சிரிப்பு வந்ததாக கே.எஸ்.ரவிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'முடிஞ்சா இவனைப்புடி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சுதீப், நித்யாமேனன், சதீஷ், பிரகாஷ்ராஜ், நாசர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கமர்ஷியல் இயக்குனர் என்ற பெயரை பெற்ற கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தையும் கமர்ஷியல் சக்ஸஸ் படமாக இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மங்காத்தா 2', கேஷுவல் விஜய், 'பில்லா 2'. வெங்கட்பிரபுவின் கனவுகள்

'சென்னை 600028' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்...

ஸ்ருதிஹாசனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படம் தெலுங்கிலும் அதே டைட்டிலில் உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

அஜித்துக்கு குரல் கொடுக்க ஆசை: தனுஷ்

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பலவித அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வருபவர்...

செளந்தர்யாவின் அடுத்த படத்தில் தனுஷ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தை இயக்கிய செளந்தர்யா அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார்...

Suriya's 'Perazhagan' director passes away

Sasi Shanker, who has directed Suriya’s 2004 comedy hit for AVM banner ‘Perazhagan’ passed away today. According to reports the popular Malayalam director...