ரஜினியும், கமலும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம்: பிரபல அரசியல் கட்சி தலைவர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சியைத் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவர் ஒரு பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் மற்றும் ரஜினியின் அரசியல் கட்சிகள் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் கட்சிகளை தங்கள் கூட்டணியில் இழுக்க பிரபல அரசியல் கட்சிகள் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கமல் மற்றும் ரஜினி அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோரின் கட்சிகள் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம் என்றும், எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைய வேண்டும் என்றும், கே.எஸ்.அழகிரி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கமல், ரஜினி கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

மனிதத் தலையைச் சுட்டு சாப்பிட்ட இளைஞர்– திடுக்கிட வைக்கும் பகீர் தகவல்!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ரெல்லி பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகில் ஒரு கோணிப்பை இருப்பதை கவனித்து இருக்கிறார்.

விக்கீபீடியா மாதிரி நித்தியானந்தாபீடியா… ரவுண்டு கட்டி கலக்கும் நித்யானந்தா!!!

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் வழக்கு என அடுக்கடுக்கான வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சுவாமி நித்தியானந்தா

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்??? அதிரடி தகவல்!!!

ரஷ்யாவின் கமலயோ தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் நிறுவனம் மற்றும் ராணுவ ஆய்வு மையம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் பெரும்

கொரோனா பீதியில் உதவிக்கு ஆளில்லை… அப்பாவின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற கொடுமை!!!

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அரசியலில் கமல் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை: தமிழக அமைச்சர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.