ரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன் அவரது கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன் ராதாகிருஷ்ணன், ‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் நான் வரவேற்பேன். அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்றும், ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வரமாட்டர்கள் என்றும் கூறினார்.