'அயலான்' படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்று விமர்சனம் செய்யப்பட்டதால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் பொங்கல் விடுமுறையில் படம் பார்க்க ரசிகர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் நாளை விட அதிகமான வசூலை அடுத்தடுத்த நாட்களில் குவித்து வரும் ’அயலான்’ திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் என்ற மைல்களை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன.