ஒரே டைட்டிலில் உருவாகும் இரு படங்களிலும் ஒரே நடிகை

  • IndiaGlitz, [Saturday,September 26 2015]

திரையுலகில் ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் தயாராவது என்பது எப்போதாவது நடைபெறுவது உண்டு. ஆனால் ஒரே டைட்டிலில் உருவாகும் இரண்டு படங்களிலும் ஒரே நடிகை நடிப்பது என்பது மிகவும் அபூர்வமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். சமீபத்தில் 'ராமையா வஸ்தாவய்யா' என்ற டைட்டிலில் இரண்டு படங்கள் தயாரானபோது, இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தென்னிந்திய திரையுலகில் நடைபெற்றுள்ளது.

'புரூஸ் லீ' என்ற பெயரில் ராம்சரண் தேஜா நடிக்க்கும் தெலுங்கு படம் ஒன்றும், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் தமிழ்ப் படம் ஒன்றும் தயாராகி வருகிறது. தெலுங்கு 'புரூஸ்லீ' விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் 'புரூஸ்லீ' படத்தில் நடிக்கும் நாயகி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர் பிரபல கன்னட நடிகை கிரிட்டி கார்பண்டா (Kriti Kharbanda). இவர் தெலுங்கு 'புரூஸ்லீ' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பசங்க' பாண்டியராஜின் உதவியாளராக இருந்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.