காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.. கிருத்திகா உதயநிதி டுவிட்டுக்கு என்ன அர்த்தம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலை வெளிப்படுத்த பயப்படவேண்டாம் என்றும் இயற்கையின் மகிமைகளில் அதுவும் ஒன்று என்றும் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த டுவிட் வைரலாகி வருகிறது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கிருத்திகா உதயநிதி. இவர் ’வணக்கம் சென்னை’ ’பேப்பர் ராக்கெட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதியின் மகன் தற்போது லண்டனில் மேற்படிப்பு படித்து வரும் நிலையில் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. முழுக்க முழுக்க ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் இது என்று கூறப்படும் நிலையில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களை நெட்டிசன்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலிக்கவோ அதை வெளிப்படுத்தவோ பயப்படக் கூடாது என்றும் இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறியிருப்பது தனது மகனுக்கு ஆறுதலுடன் கூடிய அறிவுரை கூறுவதாக பார்க்கப்படுகிறது.
Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.
— kiruthiga udhayanidh (@astrokiru) January 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments