கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் இந்த 2 பிரபலங்களா? இசையமைப்பாளர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’, 2018 ஆம் ஆண்டு ’காளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீ 5 சேனலுக்காக ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’வணக்கம் சென்னை’ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் படத்தை உறுதி செய்த 'லியோ' பிரபலம்..!

ரஜினியின் 171வது படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் தான என 'லியோ' படத்தில் நடித்து வரும் பிரபலம் உறுதி செய்துள்ளார்.

கேன்ஸ் விழாவில் முதலையை கழுத்தில் அணிந்த 'லெஜண்ட்' நடிகை: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்..!

தொழிலதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை முதலையை அணிகலனாக கழுத்தில் அணிந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தை பாராட்டிய நல்லக்கண்ணு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

விஜய் சேதுபதி மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஜித்தின் 'ஆழ்வார்' பட நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

அஜித் நடித்த 'ஆழ்வார்' என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'மிஷன் இம்பாஸிபிள் 7' டிரைலர்.. இரண்டரை நிமிட  ஆக்சன் விருந்து..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாசிபிள்' திரைப்படம் ஏற்கனவே ஆறு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ஏழாம் பாகம் உருவாகியுள்ளது என்பதும்,  இந்த படம் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும்