கிருத்திகா உதயநிதியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக், சிங்கிள் பாடல் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஏற்கனவே ’வணக்கம் சென்னை’ மற்றும் ’காளி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய நிலையில் அவர் ஒரு வெப்தொடரை இயக்கி வருவதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த வெப்தொடரின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் சிங்கிள் பாடலும் அடுத்தடுத்து வெளியாகி உள்ளது. கிருத்திகா உதயநிதியின் அடுத்த இயக்கத்தில் உருவான வெப்தொடருக்கு ‘பேப்பர் ராக்கெட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் தரண்குமார் இசையில் இந்த தொடர் உருவாகியுள்ளது.
மேலும் இந்த தொடரில் இடம்பெற்ற ’காலை மாலை’ என்ற பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Here you go! The first single #KaalaiMaalai from #PaperRocket is out now
— kiruthiga udhayanidh (@astrokiru) April 5, 2022
▶️ https://t.co/DE9SEwIdo9@PentelaSagar @riseeastcre @ZEE5Tamil @kalidas700 @actortanya @Richardmnathan @editorkishore @simonkking @dharankumar_c @sidsriram @lyricist_vivek @SaktheeArtDir pic.twitter.com/pHr4WNZwdb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com