கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
’வணக்கம் சென்னை’ மற்றும் ’காளி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தை இயக்குவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மூன்றாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராமன் நடிக்க இருப்பதாகவும் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கிருத்திகா உதயநிதி அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது என்பதும் அதன் பின் தற்போது காளிதாஸ் ஜெயராமன் நாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to Announce my next!
— kiruthiga udhayanidh (@astrokiru) June 6, 2021
Produced by @riseeastcre @PentelaSagar
Starring @kalidas700 & @actortanya
DOP @Richardmnathan
More to come ??@teamaimpr pic.twitter.com/ht0QsGIev3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments