பிகில் சிறப்புக்காட்சி விவகாரம்: 30 விஜய் ரசிகர்கள் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட பல நகரங்களில் இன்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டன. அதிகாலை காட்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
ஆனால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படத்தை அதிகாலை காட்சி திரையிட நிர்வாகத்தினர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து பிகில் திரைப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிட வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் கற்களை வீசியும் சாலையில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியும், அருகில் இருந்த கடைகளின் பேனர்களை கிழித்தும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது பட்டாசுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட 30 விஜய் ரசிகர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
#BigilFDFS #BigilReview #Vijay #Atlee #archanakalpathi #Ajith #kadamburraju #bigil # valimai
— Ak (@Suresh84377436) October 25, 2019
Our area Vijay fans verithanam in public property damage pic.twitter.com/GdsoVHrFxz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments