போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிருஷ்ணகிரி ஒட்டிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பல ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை தற்போது தீவிரம் பெற்று வருகிறது. இதனால் நேற்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏற்பட்ட புதிய தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.
இதனால் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப் படுமா என்ற அச்சம் பெரும்பாலான வடமாநிலத்தவரிடம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகட்டிவ் ரிசல்டை கொண்டு வந்தால் மட்டுமே வெளிமாநிலத்தவருக்கு அனுமதி எனப் பல மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளன. இதனால் வெளிமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவைப்படும் நபர்களுக்கு பர்கூரைச் சார்ந்த தினேஷ் என்ற இளைஞர் போலியாகத் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார். மேலும் இந்தச் சான்றிதழ்களில் பர்கூர் அரசு மருத்துமனை மருத்துவர்களின் கையொப்பம் மற்றும் சீலையும் போலியாகப் பயன்படுத்தி உள்ளார். அதோடு ஒவ்வொரு போலி சான்றிதழுக்கும் ரூ.2,500 முதல் 5000 வரையும் வசூலித்து உள்ளார். இதுகுறித்த புகார் எழுந்த நிலையில் பர்கூர் போலீசார் தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com