அடுத்தடுத்து வெளிவரும் தனுஷ்-சிம்பு பாடல்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

கோலிவுட் திரையுலகில் தனுஷும் சிம்புவும் நடிகர்களாக மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களை பாடும் பாடகர்களாகவும் விளங்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அதிலும் பிற நடிகர்களுக்காவும் இருவருமே பாடுவதுண்டு. இந்நிலையில் பிற நடிகர்களுக்காக தனுஷ் மற்றும் சிம்பு பாடிய பாடல்கள் ஒருசிறு இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர் நடிகர் கிருஷ்ணா நடித்து வரும் 'யாக்கை' படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடிய 'சொல்லித்தொலையேம்மா' என்ற சிங்கிள் பாடல் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிம்புவின் நண்பரும் பிரபல நடிகருமான விக்ரம்பிரபு நடித்துள்ள 'வீரசிவாஜி' படத்திற்காக டி.இமான் இசையில் சிம்பு பாடிய 'தாறுமாறு தக்காளி சோறு' என்ற பாடல் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இரண்டு பாடல்களையும் வரவேற்க தனுஷ், சிம்பு ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோனிகாசிவா விஜய் மகளா? 'விஜய் 60' படக்குழுவினர் விளக்கம்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் மோனிகா சிவா என்ற குழந்தை நட்சத்திரம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்...

60வது படத்திற்காக விஜய் இழந்த அந்த '10' என்ன தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது...

அடுத்தகட்டத்திற்கு செல்கிறது சசிகுமாரின் 'கிடாரி'

'வெற்றிவேல்' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்து வந்த 'கிடாரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில்...

சிம்பு-ஆதிக்-யுவன் கூட்டணியின் வித்தியாசமான திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும்...

சூர்யாவின் 'சிங்கம் 3' புதிய அப்டேட்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S3' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் சூர்யா ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றதால் தற்காலிக பிரேக் ஏற்பட்டது என்பது தெரிந்ததே...