அமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

நடிகை அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் அமலாபால் ‘க்ராவ் மகா’ என்ற தற்காப்பு கலையை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக இந்த கலையை அவர் முறைப்படி பயின்றதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த கலையை அவருக்கு பயிற்சி அளித்தது ஒரு நடிகர் என தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தில் நவநீதன் என்ற கேரக்டரில் நடித்திருந்த ஸ்ரீராம் தான் இந்த கலையை அமலாபாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அதேபோல் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் பிரபல அனுராக் காஷ்யப் அவர்களுக்கும் இவர்தான் இந்த கலையை பயிற்சி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லுக்கருப்பட்டி படத்தில் ஸ்ரீராம் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இன்னும் ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.