முதல் முறையாக வெளியான குறளரசன் காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு, தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர், டி.ராஜேந்தர். இவரின் இளைய மகன் குறளரசனுக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 29ஆம் தேதி) ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில், குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்காக டி.ராஜேந்தர் மற்றும் மாப்பிள்ளை குறளரசன் இருவரும், ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சூர்யா, உள்ளிட்ட நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர்.
இதனால் இன்று நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறளரசன் அவர் மனைவியோடு உள்ள புகைப்படமும் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments