சமீபமாக கே.ஆர்.வத்சலா பகிர்ந்த சுவாரசியமான வாழ்க்கை பயணம்.

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

 

தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற இந்திய தமிழ் நடிகை மற்றும் கே.ஆர்.விஜயாவின் தங்கையான கே.ஆர்.வத்சலா அவர்கள், அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

அவர் பேசியதாவது,

என் குடும்பத்தில் என் அக்கா கே.ஆர்.விஜயா ஒரு ஆணுக்கு இணையாக சினிமா கலையில் நுழைந்து நடித்து பணியாற்றி என்னை படிக்க வைத்தவள்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டவள். தந்தை பல கலைகளில் திறமை வாய்ந்தவர்..வேறு சமூகத்தை சேர்ந்த தந்தை தாயாரை காதலித்து பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் சாதி கலப்பு திருமணம் என்பது பெரிய புரட்சிக்கு ஈடானது.
அதன் பிறகு வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருந்தன.

அக்கா சினிமாவில் இருக்கும்போது அப்பா என்னை நாட்டியக் கலை கற்றுக்கொள்ள ஊக்குவித்தார். நானும் அக்காவும் கலைத்துறையில் பிரபலமான சகோதரியாக வர வேண்டும் என ஆசைப்பட்டார்.இப்போது வரைக்கும் என்னை நானே பார்த்து பராமரித்து கொள்ள நடனம் உறுதுணையாக உள்ளது.நான் எப்போதும் நடனத்தை கைவிடுவதில்லை.கல்யாணி கலாலயம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுக்கிறேன்.

அக்கா சினிமாவிற்காகவும் கலைக்காகவும் நிறைய அர்ப்பணிப்பு செய்தாள் . பெரும்பாலும் பக்தி ஆன்மிக வேடங்களில் நடித்தாள் .பல தடைகள் இருந்தாலும் இந்த துறையில் சாதிக்க முடிந்தது. இதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன் என கலை ஆர்வத்துடன் பேசி இருந்தார்.

மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

More News

காலில் விழுந்து நன்றி சொன்ன எம்.சி.ஏ பட்டதாரி.. கேபிஒய் பாலாவின் நெகிழ்ச்சியான செயல்..!

எம்.சி.ஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கேபிஒய் பாலா உதவி செய்த நிலையில் அவர் கண்ணீருடன் நா தழுதழுக்க காலில் விழுந்து நன்றி சொன்னபோது பாலா அதிர்ச்சி அடைந்து

'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. எந்த நாட்டில் இருந்து தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக

'பாத்து செய்யுங்க'.. சன் டிவிக்கு வேண்டுகோள் விடுத்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு சன் குருப்பிடம் 'பாத்து செய்யுங்க' என்று தனது சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2ஆம் பாகமாகிறதா அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் படம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர் அசோக் செல்வன் தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த சூப்பர் ஹிட் படத்தின்

மீண்டும் இணையும் 'தங்கலான்' கூட்டணி.. ஆனால் இந்த முறை வேற லெவல்..!

'தங்கலான்' படத்தில் பணிபுரிந்த இரண்டு பிரபலங்கள் மீண்டும் இணைய உள்ளதாகவும் ஆனால் இந்த முறை வேற லெவலில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.