புகழை அடுத்து கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: மனைவி பரிசளித்ததாம்!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் சமீபத்தில் கார் வாங்கினார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் புகழை அடுத்து இன்னொரு விஜய் டிவி பிரபலமும் புதிய கார் வாங்கியுள்ளார். அவர் ’கலக்கப்போவது யாரு’ ’குக் வித் கோமாளி’ உள்பட பல நிகழ்ச்சிகளில் பிரபலமான சரத் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் சரத் என்பதும் இவர் விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை நிரூபித்து அதன்பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ என்ற நிகழ்ச்சியில் தனது மனைவி கிருத்திகா உடன் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் தனது மனைவி கிருத்திகாவை காதலித்தது, கிருத்திகா தனக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தது குறித்த தகவல்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கலக்கப்போவது யாரு சரத்துக்கு அவரது மனைவி கிருத்திகா மாருதி சுசுகி கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த காருடன் மனைவி கிருத்திகாவுடன் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது மனைவிக்கு நன்றி என்று சரத் கூறியுள்ளார். சரத் கார் வாங்கிய செய்தியைக் கேட்டு புகழ். ரக்சன், பாலா உள்பட பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.