close
Choose your channels

விஜய் கட்சி அழைப்பு விடுத்தால் சேர்வீர்களா? கேபிஒய் பாலா சொன்ன பதில்..!

Monday, February 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் தன்னார்வலர்கள், சமூக சிந்தனை உள்ளவர்களை சேர்க்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தில் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலாவிடம் விஜய் அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் சேருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

விஜய் அவர்கள் அரசியல் குறித்து பேசுவதற்கு எனக்கு தகுதியே கிடையாது, எனக்கு அரசியலும் தெரியாது, நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன், எனக்கு இதுவே போதும் என்று கூறினார்

விஜய் அழைப்பு விடுத்தால் சேருவீர்களா என்று மீண்டும் கேட்கப்பட்ட போது ’எனக்கெல்லாம் அவர் அழைப்பு விடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, எனக்கு அரசியலை வேண்டாம், என்று தெரிவித்தார்.

மேலும் தனது திருப்திக்காக மன நிம்மதிக்காக உதவிகளை செய்து வருவதாகவும் இனிமேலும் தொடர்ந்து இந்த உதவிகளை செய்வேன் என்றும் பாலா தெரிவித்தார். இதுவரை 10 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதாக சொல்லி இருந்தேன், இப்போது 5 வாங்கி கொடுத்து விட்டேன், விரைவில் மீதி ஐந்தையும் விரைவில் வாங்கி கொடுப்பேன் என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment