விஜய் கட்சி அழைப்பு விடுத்தால் சேர்வீர்களா? கேபிஒய் பாலா சொன்ன பதில்..!

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் தன்னார்வலர்கள், சமூக சிந்தனை உள்ளவர்களை சேர்க்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தில் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலாவிடம் விஜய் அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் சேருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

விஜய் அவர்கள் அரசியல் குறித்து பேசுவதற்கு எனக்கு தகுதியே கிடையாது, எனக்கு அரசியலும் தெரியாது, நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன், எனக்கு இதுவே போதும் என்று கூறினார்

விஜய் அழைப்பு விடுத்தால் சேருவீர்களா என்று மீண்டும் கேட்கப்பட்ட போது ’எனக்கெல்லாம் அவர் அழைப்பு விடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, எனக்கு அரசியலை வேண்டாம், என்று தெரிவித்தார்.

மேலும் தனது திருப்திக்காக மன நிம்மதிக்காக உதவிகளை செய்து வருவதாகவும் இனிமேலும் தொடர்ந்து இந்த உதவிகளை செய்வேன் என்றும் பாலா தெரிவித்தார். இதுவரை 10 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதாக சொல்லி இருந்தேன், இப்போது 5 வாங்கி கொடுத்து விட்டேன், விரைவில் மீதி ஐந்தையும் விரைவில் வாங்கி கொடுப்பேன் என்று கூறினார்

More News

சமந்தாவின் மாஸ் ரீஎண்ட்ரி.. பிரபல நடிகர், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்தில் ஒப்பந்தம்?

நடிகை சமந்தா தனது உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பிலிருந்து சில மாதங்கள் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி இருப்பதாகவும், மாஸ் நடிகர் நடிக்க இருக்கும் அடுத்த ப

நெஞ்சில் சுமந்த விஜயகாந்தை கையில் வைத்திருக்கும் பிரேமலதா.. வைரல் புகைப்படம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்

மனோஜ்க்கு வேலை கிடைத்துவிட்டது.. மீனாவுக்கு தாலி கிடைத்துவிட்டது.. விறுவிறுப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த மனோஜ்க்கு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும்

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனுக்கு என்ன ஆச்சு? ஆற்றில் கார் கவிழந்ததால் பரபரப்பு..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் அவர் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும்

அரசியல் அறிவிப்புக்கு அண்டை மாநிலத்தில் 'கோட்' படப்பிடிப்பு.. குவிந்த ரசிகர்கள்..

தளபதி விஜய் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும்