செருப்பால் அடிப்பேன் என சொன்ன பெற்றோர்.. நொந்து நூலான இளைஞருக்கு பாலா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பைக் வாங்கித் தாருங்கள் என்று பெற்றோரிடம் கேட்டதற்கு செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்கள் என பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்த கேபிஒய் பாலா அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன்பின் ‘குக் வித் கோமாளி’ உள்பட பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் பாலா, பல சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் அவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியை பிறருக்காகவே செலவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் தருவது, மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி செய்வது உள்பட பல்வேறு உதவிகளை அவர் செய்து வரும் நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பெட்ரோல் போட வந்தரிடம் இந்த பைக் எவ்வளவு என்று கேட்க, 43 ஆயிரம் என்று கூறினார். உடனே அந்த இளைஞர் சிரித்தபடி ’பைக் வாங்க பத்தாயிரம் காசு கேட்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்றாங்க, இவ்வளவு காசு எப்படி கொடுப்பாங்க? என வறுமை வலி நிறைந்த குரலுடன் பேசிய வீடியோவை பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பாலா உடனே அந்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர் ஆசைப்பட்ட அதே பைக்கை வாங்கிக்கொண்டு பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் போடச் சொல்வது போல் அந்த இளைஞரிடம் பேசி, பிறகு திடீரென பைக்கை அவருக்கே பரிசாக வழங்கினார். இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அந்த இளைஞர் பாலாவை கட்டிப்பிடித்து கண்கலங்கிய காட்சியின் வீடியோ தற்போது பாலாவின் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com