விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி.. நடமாடும் கர்ணனாக மாறிய கேபிஒய் பாலா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அவ்வப்போது பொதுமக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சென்னையில் வெள்ளம் வந்தபோது பல வீடுகளுக்கு அவரே சென்று பணம் கொடுத்தார் என்பதும் தெரிந்தது.
அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கம்ப்யூட்டர் லேப்டாப் உள்ளிட்டவையும் அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது போன்ற செய்திகள் வீடியோ மூலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பாலாவுக்கு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது கிடைத்த நிலையில் அந்த விருது கிடைத்த மகிழ்ச்சியில் அவர் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் தன்னுடைய மகனின் படிப்புக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பதாகவும் கூறினார்.
அவர் கூறியதை கவனமுடன் கேட்ட பாலா உடனே தனது பாக்கெட்டில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து அவருடைய கையில் கொடுத்து படிப்புக்காக ஃபீஸ் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டு சென்று விட்டார். விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் தற்செயலாக அவர் சந்தித்த ஒரு பெண்ணின் பையன் படிப்புக்கு உதவி செய்ததை அடுத்து அவர் நடமாடும் கர்ணனாக வாழ்ந்து வருகிறார் என்று இந்த வீடியோவுக்கு பலர் கமண்ட் அளித்து வருகின்றனர்.
KPY BALA Manushan ❤️🤞#KpyBala pic.twitter.com/tSaC6K3MrG
— 𝕏 Dark Devil AK 𝕏 (@Trending_kiing) May 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com