அக்கவுண்டில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து மக்களுக்கு கொடுத்த பாலா.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் என ’கலக்கப்போவது யாரு’ பாலா கொடுத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருவெள்ளம் காரணமாக பொதுமக்கள் பலரும் தத்தளித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை பிரபலமான ’கலக்கப்போவது யாரு’ பாலா தன்னுடைய அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது ’சென்னை மக்கள்தான் என்னை வாழ வைத்தார்கள், என்னை வாழவைத்த சென்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய அக்கவுண்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்துள்ளேன்.

நான் முதன் முதலில் சென்னைக்கு வந்து இறங்கியது அனகாபுத்தூர் தான். எனவே அந்த பகுதி மக்களுக்கு உதவி செய்யவே இங்கு வந்தேன். நான் என்னுடைய சொந்த காசை கொடுத்துள்ளேன், இது டொனேஷன் எல்லாம் இல்லை’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த உதவியை அடுத்து பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்