எம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்தது. இதில் ராஜ்சபா எம்,பிக்களாக பதவி வகித்து வந்த பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் போட்டியிட்டனர்.
சென்ற 2020-இல் தமிழக மாநிலங்களவையில் 6 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் காலியாகின. அந்தவகையில் பதவிகளில் 3 பேர் அதிமுக-வைச் சேர்ந்தவர்களாகவும், 3 பேர் திமுக-வைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியானது அதிமுக சார்பாக கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தியலிங்கமும், முனுசாமியும் விருப்பமனு அளித்திருந்த நிலையில், அவர்கள் அதிமுக சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதன்பின் வேப்பனஹள்ளி தொகுதியில் களமிறங்கிய கேபி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்தியலிங்கமும் தேர்தலில் வெற்றிபெற்றனர். இதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இவர்கள் இருப்பதால், எந்த பதவியில் நீடிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.
நாளை எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் நடக்கவிருப்பதால், முனுசாமியும் வைத்தியலிங்கமும் இன்று எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.