close
Choose your channels

ஆத்தா மாதிரி நீயும் அவிசாரின்னு பேர் எடுக்கனும்ன்னு நினைக்கிறியா? 'கோழிப்பண்ணை செல்லத்துரை' டிரைலர்..!

Monday, September 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிய ’கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

11 வயதில் தனது தங்கையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாயகன் தனது தங்கையை பாசத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த தங்கைக்கு திடீரென ஒரு காதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ஏகன், பிரகிதா, சத்யா, குட்டி புலி தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தாத்தா, பவா செல்லதுரை உள்பட பலர் நடித்துள்ளனர்.

ரகுநாதன் இசையில், அசோக் ராஜ் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சீனு ராமசாமியின் மற்ற திரைப்படங்கள் போலவே இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment