கமல்ஹாசன் பெயரை எழுதியே உலக சாதனை செய்த பெண்!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி உலக சாதனை செய்த இளம்பெண்ணுக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புள்ளிகள் மற்றும் கோடுகள் இல்லாமல் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி கமல்ஹாசனின் உருவப்படத்தை கேரளாவைச் சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் எழுதியுள்ளார். இந்த சாதனைக்காக அவருக்கு வஜ்ரா உலக சாதனை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!